அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது. அந்த மோசடியின் பெயர், 'சரக்கு மாற்று மோசடி (Transshipment Scam)'. அதாவது, அமெரிக்கா எந்த நாட்டிற்கு குறைவான வரி விதித்திருக்கிறதோ, அந்த நாட்டிற்கு மோசடி செய்யும் நாடுகள் தங்கள் பொருளை ஏற்றுமதி செய்கின்றன. அங்கே இருந்து அந்தப் பொருள்கள் அமெரிக்கா சென்று இறங்குவதால், வரி குறைகிறது. இதனால், அமெரிக்காவிற்கு ஓராண்டிற்கு சராசரியாக 75 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்படுகிறது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி 'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' - வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்! இந்த அறிக்கையில் சீனாவைக் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்கா, சென்னை, புனே போன்ற இந்திய மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது. அது என்ன? அமெரிக்காவின் வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்காகச் சீனப் பொருட்கள் வேறு சில நாடுகளின் வழியே அமெரிக்கச் சந்தைக்குள் நுழைகிறது. இதன் காரணமாக அமெரிக்கத் தொழிற்சாலைகளின் உற்பத்தி முடங்கி பிற வெளிநாடுகள் பயனடைகிறது. சீனா, பம்ப் மற்றும் கம்ப்ரஸ்ர்களை முதலில் இந்திய மாநிலங்களான சென்னை, குஜராத், புனா ஆகியவற்றிற்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் சீனா வரி ஏய்ப்பு செய்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது அமெரிக்கா. அந்த அறிக்கையில் அமெரிக்கா இந்திய மாநிலங்களை மட்டும் குற்றம் சாட்டவில்லை. மெக்சிகோ, வட கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில மாநிலங்களையும் குறிப்பிடுகிறது. இப்படி வரி ஏய்ப்பு செய்ய பயன்படும் மாநிலங்களை அமெரிக்கா, 'கெட்ட சகோதரி நகரங்கள்' என்று குறிப்பிடுகிறது. Gold: 'இந்த' விலையை தாண்டினால்தான், இனி தங்கம் விலை உயரும்; கவனியுங்க மக்களே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/us-flags-chennai-pune-in-china-transshipment-scam-report




