சியோல், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தென் கொரிய ராணுவம் பல்வேறு போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சிகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவ்வப்போது பல நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதனிடையே சமீப காலமாக வடகொரிய அதிபர் கிம்முடன் நட்புறவை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க தென்கொரியா மறுத்ததையும் டிரம்ப் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார். இந்த காரணங்களால், தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து நடத்த இருந்த ‘பிரீடம் ஷீல்டு’(Freedom Shield) என்ற 11 நாட்கள் போர் பயிற்சியின் கால அளவு குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் இந்த முடிவால் வடகொரியாவுக்கு திருப்தி ஏற்பட்டதாக தெரியவில்லை. வடகொரிய அதிபரின் சகோதரியான கிம் யோ ஜாங் இது குறித்து கூறுகையில், “இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ராணுவப் பயிற்சிகளின் கால அளவு குறைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் ஆக்ரோஷமான தன்மை மாறப்போவதில்லை. இதை 'நல்லெண்ண நடவடிக்கை' என்று காட்டுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்தாலும், அவர்கள் விரும்பிய பதில் அவர்களுக்கு கிடைக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், வடகிழக்கு கடல் பகுதி அருகே வடகொரிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்த இலக்கை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தென் கொரியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சியின் கால அளவை அமெரிக்கா குறைத்துள்ள சமயத்தில், வடகொரியா ஏவுகணையை வீசியிருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/north-korea-fires-missile-into-the-sea-in-protest-against-joint-us-south-korea-military-exercises




