லக்னோ, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசார பாணியை கையில் எடுத்துள்ளார். சிவப்பு நிற அதிநவீன பஸ் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பாணிதேர்தல் பிரசாரத்திற்காக அகிலேஷ் யாதவ் ஒரு பிரம்மாண்ட சிவப்பு நிற அதிநவீன பஸ்ஸை வடிவமைத்துள்ளார். இந்த பஸ்ஸை, தமிழக முதல்-அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் பிரசார பஸ்ஸை வடிவமைத்த அதே தொழில்நுட்பக் கலைஞர் தான் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன வசதிகள் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்த பஸ்ஸில், தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்கான கான்பிரன்ஸ் ஹால், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் கூட்டத்திற்கு நடுவே பஸ்ஸிற்குள் இருந்தபடியே அதன் கூரையின் வழியாக மேலே வந்து பிரசாரம் செய்யும் வகையில் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அகிலேஷ் படம் மட்டுமே பொதுவாக சமாஜ்வாடி கட்சியின் பிரசார வாகனங்களில் கட்சியின் மற்ற முக்கிய தலைவர்களின் படங்களும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை விஜய் பாணியை பின்பற்றி, பஸ்ஸை சுற்றி அகிலேஷ் யாதவின் புகைப்படம் மட்டுமே பிரம்மாண்டமாக ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/akhilesh-follows-vijay-style-grand-bus-readied-for-up-poll-campaign




