சென்னை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், சிட்லப்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று பெய்த மழையில் குரோம்பேட்டை அருகே ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீருடன் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-and-overflowing-sewage-in-the-tambaram-area-caused-difficulties-for-motorists




