சென்னை, மாலூர் (Malur) நிலையத்தில் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' (Electronic Interlocking) வசதியை ஏற்படுத்துவதற்கான 'நான்-இன்டர்லாக்கிங்' (Non-Interlocking) பணிகள் நடைபெறவுள்ளதால், ரெயில் சேவைகளில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. I. ரெயில் சேவையின் பகுதி ரத்து / பயணப் பாதை குறைப்பு: 18 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 16519 ஜோலார்பேட்டை - KSR பெங்களூரு MEMU ரெயில், பங்காரப்பேட்டை மற்றும் KSR பெங்களூரு இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வண்டி பங்காரப்பேட்டையுடனேயே தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் (அதாவது, KSR பெங்களூரு வரை செல்லாது). II. ரெயில் சேவையின் பகுதி ரத்து / புறப்படும் இடத்தில் மாற்றம்: 18 ஆகஸ்ட் 2026 அன்று காலை 8.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 66550 கே.எஸ்.ஆர். பெங்களூரு - ஜோலார்பேட்டை MEMU ரெயில், கே.எஸ்.ஆர். பெங்களூரு மற்றும் பங்காரப்பேட்டை இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வண்டி பங்காரப்பேட்டையிலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமான காலை 10.05 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும். III. ரெயில் சேவைகளின் திசைதிருப்பல்: ஆகஸ்ட் 17, 2026 அன்று கொல்லத்தில் இருந்து 17.00 மணிக்கு புறப்படும் ரெயில் எண். 07314 கொல்லம் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், சேலம், ஓமலூர், தர்மபுரி, ஓசூர், பையப்பனஹள்ளி கேபின், யஷ்வந்த்பூர் ஏ கேபின் மற்றும் துமகுரு ஸ்கிப்பிங் ஸ்டாப், கிருஷ்ணாராஜாபுரம், கிருஷ்ணாராஜபுரம் வழியாக இயக்கப்படும். 17 ஆகஸ்ட் 2026 அன்று இரவு 8:00 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 16566 மங்களூரு சென்ட்ரல் - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், குப்பம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நிற்காமல், சேலம், ஓமலூர், ஓசூர், பெலந்தூர் ரோடு மற்றும் பனஸ்வாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். ஆகஸ்ட் 16, 2026 அன்று டானாபூரில் இருந்து 15.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 03251 டானாபூர் - எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் விஜயவாடா, குண்டூர், தோன், தர்மாவரம், யெலஹங்கா மற்றும் எஸ்எம்விடி பெங்களூரு வழியாக இயக்கப்படும். ஓங்கோல், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட்டை மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கிறது. ரெயில் எண். 05073 KSR பெங்களூரு - லக்னோ சிறப்பு ரெயில் 18 ஆகஸ்ட், 2026 அன்று KSR பெங்களூரில் இருந்து 07.15 மணிக்குப் புறப்படும். SMVT பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், யெலஹங்கா, தர்மாவரம், தோன், குண்டூர் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் நிறுத்தங்கள். கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கின்றன. 03252 SMVT பெங்களூரு - டானாபூர் சிறப்பு ரெயில் SMVT பெங்களூருவில் இருந்து ஆகஸ்ட் 18, 2026 அன்று 23.50 மணிக்குப் புறப்பட்டு SMVT பெங்களூரு, யெலஹங்கா, தர்மாவரம், தோன், குண்டூர் மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும். ஒயிட்பீல்டு, பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் மற்றும் ஓங்கோல் ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கின்றன. IV. ரெயில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுதல்: 18 ஆகஸ்ட் 2026 அன்று 20:40 மணிக்கு அசோகபுரத்திலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ள ரெயில் எண் 16022 அசோகபுரம் - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் காவேரி எக்ஸ்பிரஸ், பயண வழியில் 2 மணி நேரம் தாமதப்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-major-changes-to-train-services




