ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார். திண்டுக்கல் நத்தம் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்ட மதுரை பாந்தர்ஸ், 241 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தியது. மதுரை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எனத் தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் களத்துக்கு வந்த ஹரி, முதல் போட்டி என்பதையே மறக்கடிக்கும் வகையில் பேட்டை சுழற்றத் தொடங்கினார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்துகொண்டிருக்க, ஹரி மறுபக்கம் மதுரை அணியின் இன்னிங்ஸை தாங்கி நின்றார். 55 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய அவர், 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மிரட்டினார். அவரது அதிரடி ஆட்டத்தால் மதுரை பாந்தர்ஸ் அணி 200 ரன்களைக் கடந்தது. சதத்தை நெருங்கிய ஹரி, இறுதியில் 98 ரன்களில் ரன் அவுட் ஆனார். வெறும் இரண்டு ரன்களில் சதம் தவறியிருந்தாலும், ராணிப்பேட்டை மாவட்ட அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ஹரி ராகவேந்திரா, இன்று டிஎன்பிஎல் போன்ற களத்தில் அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். TNPL 2026: ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://sports.vikatan.com/cricket/tnpl-2026-from-ranipet-to-fame-hari-raghavendra-smashes-98-on-debut




