தஞ்சாவூர், கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, 35 பவுன் தங்க நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். கடந்த (சனிக்கிழமை) அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில், செல்வராஜின் கைபேசியில் இணைக்கப்பட்டிருந்த வீட்டு கண்காணிப்பு கேமரா திடீரென வேலை செய்யாமல் போனது. கதவின் பூட்டு உடைப்பு இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரைத் தொடர்புகொண்டு வீட்டைப் போய்ப் பார்க்குமாறு கூறியுனார். அங்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செல்வராஜுக்கும், திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 35 பவுன் நகைகள் திருட்டு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் செல்வராஜின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, கொள்ளையர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Thanjai || ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வீட்டில் 35 பவுன் கொள்ளை — Thanthi TV (@ThanthiTV) August 17, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/35-sovereigns-of-gold-jewelry-stolen-after-breaking-into-a-house-near-kumbakonam




