நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சீசன் காரணமாக தற்போது பலாப்பழங்கள் அதிகமாக காய்த்துள்ளன. இதனை ருசித்து சாப்பிடுவதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் முகாமிட்டு உள்ளன. தண்ணீர் மற்றும் பலாப்பழங்களை தேடி காட்டு யானைகள் சாலையோரங்களில் நடமாடி வருகின்றன. தற்போது மரப்பாலம், குறும்பாடி, சின்ன குறும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை போன்ற பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை ஒன்று சாலைகளில் உலா வருகிறது. இதனால் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, வனத்துறையினர் வழிவகை செய்து வருகின்றனர். இந்தநிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர். பகுதி அருகே ஒற்றை காட்டு யானை சாலையோரத்தில் முகாமிட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானை அருகே சென்று வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-mountain-road-motorists-alarmed




