டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில் நீர்மின் திட்டத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை காலை பணியாளர்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு அப்போது, பெய்த திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சுரங்கத்திற்குள் 22 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 12 பேரை மீட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 3 பேரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுரங்க விபத்தில் மாயமானவர்களில் மேலும் 2 பேர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால், சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய ஒருவரும் உயிரிழந்திருக்கலாம் என கருத்தப்படுவதால் அவரது உடலை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/uttarakand-surangapathai-vipathu-pali-ennikkai-9-aaga-uyarvu




