வேலூர், வேலூரில் தொண்டு நிறுவனத்துக்கு வரும் ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொண்டு நிறுவனம் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆலிவர் சினியோன் கதிரேஷ் (வயது 60). தொழில்அதிபர். இவரின் நண்பரான வேலூர் புது பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் (53) என்பவர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.100 கோடி நிதி திரட்ட உள்ளதாகவும், இந்த நிதியை திரட்டுவதற்கு முன்பணமாக சில கோடி தேவைப்படுவதாகவும், முன்பணம் கொடுத்தால் அதற்கு ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக பெருமாள் மற்றும் வள்ளலாரை சேர்ந்த ஷாஜகான் (48), திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த மனோஜ்குமார் (50) ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.2 கோடியே 17 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிகள் மூலமாகவும் அவர்களிடம் கொடுத்தார். அதன் பின்னர் சில மாதங்கள் ஆகியும் பெருமாள், ஷாஜகான். மனோஜ்குமார் ஆகியோர் தொண்டு நிறுவனத்துக்கு நிதி பெறவில்லை. மேலும் அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவர் சினியோன் கதிரேஷ் இதுபற்றி 3 பேரிடமும் கேட்டபோது விரைவில் தொண்டு நிறுவனத்துக்கு நிதி வந்துவிடும். அதன் பின்னர் பங்கு தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்துள்ளனர். புகார் இதுகுறித்து ஆலிவர் சினியோன் கதிரேஷ் கடந்த 14-ந் தேதி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு சிவராமனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். கைது அதில், பெருமாள், ஷாஜகான், மனோஜ்குமார் ஆகியோர் ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் இருந்து பெற்ற ரூ.2 கோடியே 17 லட்சத்தை 3 பாகமாக பிரித்து எடுத்துக் கொண்டதும், தொண்டு நிறுவனத்துக்கு வரும் நிதியில் பங்கு தருவதாக மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாள், ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மனோஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested




