சேலம், சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் தந்தை, தாய் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமி தனது தாயாருடன் வளர்ந்து வருகிறாள். இதனிடையே, சிறுமியின் தாயாருக்கு அதேபகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வீரமணி, சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10-ந் தேதி சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த சிறுமி, பள்ளி தலைமை ஆசிரியையிடம் சென்று தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்துள்ளாள். இதுகு றித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீரமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-10-student-pocso-case-filed-against-mothers-paramour



