சென்னை, சென்னை மணலி அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (43 வயது). பெயிண்டர். இவரது மனைவி சுந்தரி (37 வயது). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. கடந்த 27-ந்தேதி சுந்தரி உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மனைவி இறந்த சோகத்தில் இருந்த ராஜசேகர், நேற்று காலை வீட்டின் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல், அவர் இறந்த 3-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-commits-suicide-after-wifes-death




