சென்னை, சென்னை அருகே மாதவரம் பகுதியில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த அஜய் அரவிந்த் (வயது 27), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு தனது பைக்கில் மதுரவாயல்-வண்டலூர் மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்தார். புழல் ரெட்டேரி அருகே இறக்கத்தில் இறங்கியபோது, புழலில் இருந்து மாதவரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, அவரது பைக் மீது மோதியது. வாலிபர் பலி இதில் பலத்த காயம் அடைந்த அஜய் அரவிந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-dies-after-being-hit-by-container-lorry




