இம்பால் மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் மணிப்பூரில் புகுந்து 4 பேரை படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இந்தோ-மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் பிலாங் கிராமத்தில் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். நேற்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்ச்சியாக, 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த அவர்கள், நாகா சமூகத்தினர் ஆவர். முதல்-மந்திரி இரங்கல் இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அதனுடன், உபா சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி யம்னம் கெம்சந்த் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக நாகா சமூகத்தினர் தரப்பில், நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 24 மணிநேர கடையடைப்பும் அறிவிக்கப்பட்டு இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/four-killed-in-manipur-myanmar-gang-rampage




