அரசியலமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை தடை செய்யப்பட்டு, குற்றமாக கருதப்பட்டாலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக இதுபோன்ற செயல் நடத்தப்படுமானால், பள்ளியில் படிக்கும் 4 வயது குழந்தைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த சம்பவம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் மனநிலையை காட்டுகிறது. தலித் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதையும், வெற்றி பெறுவதையும் அவர்கள் விரும்பவில்லை” என்றார். காங்கிரஸ் காரிய கமிட்டியில் தனக்கு பலரும் ஆதரவு அளிக்கவில்லை என்று கார்கே சுட்டிக்காட்டியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “ இல்லை, அவர் அப்படிச் சொல்லவில்லை. சிலர் ஆதரவளிக்கவில்லை என்றுதான் அவர் கூறினார். நான் அவருக்கு ஆதரவளித்தேன், மேலும் பலரும் அவருக்கு ஆதரவளித்தனர்" என்றார். கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரகாண்ட் மாநிலம் ஹலத்வானி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு ( 'ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கதன்' என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த மைதானத்தைப் புனிதப்படுத்தும் நோக்கில் 'ஹவன்' (ஓமம்) வளர்த்துச் சடங்குகளை நடத்தினர். கார்கேவின் கூட்டத்தில் எழுப்பப்பட்ட சில முழக்கங்கள் 'இஸ்லாமிய முழக்கங்கள்' போல் இருந்ததாக அவர்கள் நியாயப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவையில் மத்திய மந்திரியும், முன்னாள் பா.ஜ.க. தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/discrimination-against-dalits-continues-in-india-rahul-gandhi




