கோஹிமா, மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல், கிளர்ச்சிக்குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மியான்மரில் இருந்து இந்திய எல்லைக்குள் போதைப்பொருளை கடத்தவும், தாக்குதலில் ஈடுபடவும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை ஒடுக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கண்ணிவெடி தாக்குதல் இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் சுமவுகேதிமா மாவட்டம் சுகோவி கிராமம் அருகே உள்ள சாலையில் பாதுகாப்புப்படையினர் வாகனம் சென்றது. அப்போது அந்த வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் அசாம் ராஷ்டிரிய ரைபில் படைப்பிரிவை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார். மேலும், 4 வீரர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற கூடுதல் படையினர், படுகாயமடைந்த வீரர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை நடத்திய பயங்கரவாத கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/1-soldier-killed-4-injured-after-ied-blast-targets-assam-rifles-in-nagaland




