நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் முன்னணி நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் இதையடுத்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டீசர் வெளியீடு ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ரைஸ் ஆப் மஹாசக்தி' என்ற பெயரில் வெளியாகியுள்ள டீசரில் பிரமாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தீபாவளி ரிலீஸ் மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/diwali-release-mookkuthi-amman-2-teaser-released




