ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்கத்தில் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் 3 திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன. அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேசா இயக்கத்தில் தசரா திரைப்படத்தில் நானி -கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 20 கோடி பார்வைகளை கடந்த “ஆயா சேர்” பாடல் நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயா சேர்’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1980-களின் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம், செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகம், அமைப்புரீதியான அடக்குமுறையை எதிர்த்து குடியுரிமைக்காகப் போராடுவதை காட்டுகிறது. படத்தின் டீசர் வெளியீடு; ரிலீஸ் தேதி மாற்றம் இந்நிலையில், நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகளில் இடம்பெற்ற மேக்கிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் கூடிய அனிருத்தின் பின்னணி இசைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. JADAL'S WAR CRY out now! ▶️ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nanis-the-paradise-film-teaser-out




