சென்னை, இடைத்தேர்தல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அவர்களுக்கே அந்த தொகுதிகளில் த.வெ.க. மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி.மு.க.), ஜானகிராமன் (நா.த.க.) சுகந்தி (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோரும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), கார்த்திகா (நா.த.க.), லட்சுமணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோரும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். வன்னியர் வாக்காளர்கள் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோன்று. தாரபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 743 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பா.ம.க.வுக்கு அதிகளவில் வாக்களிக்கும் வன்னிய சமுதாய மக்கள், மதுராந்தகம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் வாக்கே அந்த தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். தாராபுரம் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு வன்னியர் வாக்குகள் இல்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வன்னியர்கள் அந்த தொகுதியிலும் வசித்து வருகின்றனர். யாருக்கு வாக்கு? கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் அதரவு அளிக்கவில்லை என்று அந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் பா.ம.க.வினரின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைக்கு சென்றுள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு இல்லை என்று தான் அர்த்தம். அதேபோல் தி.மு.க.வுக்கும் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. த.வெ.க.வுக்கு செல்ல வாய்ப்பு அதே நேரத்தில், பா.ம.க. சட்டமன்ற தலைவர் சவுமியா அன்புமணியின் சட்டமன்ற பேச்சுகளை முதல்-அமைச்சர் விஜய் உன்னிப்பாக கவனிப்பதும், அவருக்கு அதிக நேரம் பேச வாய்ப்பளிப்பதும், அவரது கருத்துகளுக்கு சாதகமாக அரசு பிரதிபலிப்பதும் த.வெ.க.-பா.ம.க. இடையே ஒரு இணக்கமான சூழல் நிலவுவதைத்தான் வெளிப்படுத்துகிறது. அப்படியானால், பெரும்பாலும் பா.ம.க. வாக்குகள் த.வெ.க.வுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-vote-for-bhamakavinar-in-madhuranthakam-and-dharapuram-constituencies-opinion-of-political-observers




