சென்னை, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அருகே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அ.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக் கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. இந்த திருத்தத்தை எதிர்த்து அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், “சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18-ந் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, சபாநாயகர், பேச அனுமதிக் கவில்லை" என வாதிடப்பட்டது. கேள்வி எழுப்ப முடியாது தமிழக அரசு தரப்பில், கடந்த ஜூன் 19-ந் தேதி சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் காட்டி வாதிடப்பட்டது. மேலும் தமிழக அரசு தரப்பில், “எதிர்க்கட்சி தலைவரின் திருத் தத்தை ஏற்று அதனை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் திருத்தத்துடன் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். திருத்தம் கொண்டு வரப்பட்டபோது எவரும் எதிர்க்கவில்லை. சட்டசபை நடவடிக்கைகளை கோர்ட்டில் கேள்வி எழுப்ப முடியாது. அதற்கு அரசியல் சாசனம் தடை விதிக்கிறது. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை சட்டசபையில் முடிவாக கருதி வழக்கு தொடர முடியாது” என வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டசபையில் அமைதியாக இருந்து விட்டு காலம் தாழ்த்தி மனுதாக்கல் செய்வதை ஏற்க முடியாது என கூறி அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-amendment-to-the-mekedatu-dam-resolution-aiadmk-petition-dismissed




