உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 48 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் ஆட்டங்கள், 2-வது சுற்று, 3-வது ரவுண்டுகள் முடிந்து காலிறுதி ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நடை பெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போராடின. பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மொராகோ கோல் கீப்பர் யாசின் புனோ அபாரமாக தடுத்ததால் முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிந்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 60-வது நிமிடத்தில் எம்பாப்பே முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதன்பிறகு மொராகோ பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பிரான்ஸ் டிபென்சை உடைக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அரையிறுதியில் பிரான்ஸ் அணி, ஸ்பெயின்–பெல்ஜியம் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்கிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-france-defeats-morocco-to-advance-to-the-semi-finals




