புதுடெல்லி, ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதற்காக ஜெப்டோ நிறுவனத்திற்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல சினிமா டிக்கெட் முன்பதிவு செயலியான புக் மை ஷோ நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்த நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூதன மோசடி ஆன்லைன் செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்கள் வாங்கும் பொருட்களுடன் கூடுதல் கட்டணங்களை ரகசியமாக சேர்ப்பதை "டார்க் பேட்டர்ன்ஸ்" அல்லது இருண்ட வழிமுறைகள் என்று அழைக்கின்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி, இந்த செயல்களுக்கு மத்திய அரசு கடுமையான தடை விதித்துள்ளது. ஜெப்டோ பொருட்களை வாங்கும் கடைசி நிமிடத்தில் கையாளுதல் கட்டணம் மற்றும் கட்டண மெம்பர்ஷிப் கார்டுகளை வாடிக்கையாளருக்கு தெரியாமல் கார்ட்டில் சேர்த்ததற்காக ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ சினிமா டிக்கெட் புக் செய்யும்போது, 'புக் ஏ ஸ்மைல்' என்ற அறக்கட்டளைக்கு நுகர்வோரின் அனுமதியின்றி தானாகவே 1 ரூபாய் நன்கொடையை டிக் செய்து வசூலித்ததால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிசிக்ஸ் வாலா ஆன்லைன் கல்வி நிறுவனமான இதற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ இன்சூரன்ஸ் வேண்டாம் என்று கூறுபவர்களை, "இல்லை, நான் ஆபத்தை சந்திக்கிறேன்" என்று கட்டாயப்படுத்தி மிரட்டும் வகையில் பட்டனை அழுத்த வைத்ததற்காக மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனுஜ் ஜிண்டால், பஸ்ட் கிரை, மெகாபி, பார்ம் ஈசி, ஸ்பைஸ் ஜெட்: ஆகிய நிறுவனங்களுக்கும் தலா 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/online-fraud-9-companies-fined-rs-20-lakh




