தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந் துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தின் முக்கிய ஆதார மாக விளங்கி வருகிறது. அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்க ரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாத முதல் வாரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் இதுவரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. கனமழை இந்தநிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளம் மாநிலம் பெரியாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,650 கனஅ டியில் இருந்து 6,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 113.70 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று அணையின் நீர் மட்டம் 116.70 அடியாக உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 2,033 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இருப்பினும், பாசனத்துக்கு இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/mullaperiyar-dam-water-level-rises-to-116-feet




