புதுடெல்லி ஒரு நாட்டிற்கான பலனை விட மனித இனத்திற்கான அமைதியே மிக முக்கியம் என்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 25-ம் ஆண்டை குறிக்கும் வகையிலான நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், அந்த கவுன்சிலின் தலைவரான துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். மனித அமைதி அப்போது அவர், மோதல்களையும், முரண்பாடுகளையும் உலகம் சுமந்து கொண்டிருக்கும் சூழலில், அவற்றையெல்லாம் கடந்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் வெற்றியானது குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றார். ஒரு நாட்டிற்கான பலனை விட மனித அமைதி மற்றும் மனித இனத்திற்கான அமைதியே மிக முக்கியம். அந்த கொள்கையின் அடிப்படையில் பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதி, வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றிற்கான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/peace-for-humanity-more-important-than-national-gain-vice-president




