சென்னை, தங்கம் விலை காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் இருந்து வருகிறது. சில நேரங்களில் பிற்பகல் என்பது மாலை நேரங்களில் கூட விலை மாற்றம் காணப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம் இருந்தது. நேற்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கு விற்றது. இதற்கிடையில் மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையானது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-risen-slightly-what-is-the-situation-today




