சென்னை, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (35 வயது). இவரது நண்பர் ராஜேந்திரன். இவர், திமுகவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இருவரும் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திமுக குறித்து கருணாகரன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது கருணாகரன், ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து நண்பர் என்றும் பாராமல் கருணாகரனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கருணாகரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், உயிரிழந்த கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/outrage-over-dmk-slander-friend-arrested-for-stabbing-youth-to-death




