சென்னை, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மின் கணக்கீட்டாளர் பணி வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பணியாளர்கள் பற்றாக்குறை மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தை தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வலியுறுத்தல் எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-privatize-electricity-metering-should-be-abandoned-ttv-dinakaran-insists




