பெய்ஜிங், சீனாவில், மருத்துவ ரீதியாக சிறுநீரகம் பொருந்துவதற்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு மட்டுமே இருந்தபோதிலும், 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு சிறுநீரக தானம் வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 4 ஆண்டுகால போராட்டம் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சுங் (வயது 33). இவருக்கு பிறவியிலிருந்தே சிறுநீரகக் குழாய் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு 2 சிறுநீரகங்களும் முற்றிலும் செயலிழந்தன. வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் செய்துகொண்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் காத்திருந்தார். மருத்துவர்கள் எச்சரிக்கை கணவரின் நிலையைக் கண்டு வருந்திய அவரது மனைவி லியாங் (வயது 25), தனது சிறுநீரகத்தை தானமாகத் தர முன்வந்தார். ஆனால், இரத்த சம்பந்தம் இல்லாத தம்பதிகளுக்குள் சிறுநீரகம் பொருந்துவதற்கான சாத்தியக்கூறு 10%க்கும் குறைவு என மருத்துவர்கள் எச்சரித்தனர். எனினும், லியாங் தனது முடிவில் உறுதியாக இருந்தார். வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு, தம்பதியர் இருவருக்கும் அரிதான ஒரே ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே இவர்களின் இணக்கத்தன்மைக்கான முக்கிய காரணியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) குவாங்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது இணை மருத்துவமனையில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/china-wife-saves-husbands-life-by-donating-her-kidney




