நேற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தேர்தல் ஆணையம் குறித்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையே அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தில் என்ன பிரச்னை? இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார். இவருக்குக் கீழ், இரண்டு ஆணையர்கள் உள்ளனர். சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான் அவர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி. இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களிடம் கூறப்படாமலே சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மூன்று பேரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டியவற்றில், ஒருவர் மட்டுமே முடிவு எடுத்திருக்கிறார். அவர் யார் சொன்னதால் அல்லது யாராவது அழுத்தத்தால் அந்த முடிவுகளை எடுத்தார் போன்ற கேள்விகள் ஞானேஷ் குமாரின் பக்கம் திரும்பின. தேர்தல் ஆணையத்தின் பதில் இந்தக் கேள்விகளுக்கு நேற்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “கருத்து வேறுபாடுகள் எந்தவொரு அமைப்பிலும் இயல்பே. இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திர அமைப்பு. ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் 2023-ம் ஆண்டின் சட்ட நடைமுறைகளின்படியே எடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுல் காந்தி வீடியோ ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் குளறுபடிகள் நடக்கின்றன. வாக்குத் திருட்டுகள் நடக்கின்றன. எஸ்.ஐ.ஆரில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். Vote chori is a crime against the Indian people and a direct attack on our constitution. The BJP, RSS and EC who organised it have committed an act of treason. Justice will be served. — Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2026 இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் வெடித்துள்ள பிரச்னை குறித்து ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்துகொண்டிருப்பது முற்றிலும் தவறானது. இது தேசத் துரோகம். நாட்டிற்கு எதிரானது. காலம் வரும்போது நாங்கள் உங்களைப் பிடிப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் தப்பவே முடியாது” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்குக் கேப்ஷனாக, “வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றமாகும். அது நமது அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல். இதை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. நீதி நிச்சயம் வழங்கப்படும்” என்று பதிவிடப்பட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/rahul-gandhi-targets-ec-amid-report-of-internal-disagreements




