திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், அங்கு அமர்ந்திருந்த ஹோட்டல் செக்யூரிட்டி நூலிழையில் உயிர் தப்பினார். கார் மின்கம்பத்தில் மோதி விபத்து கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில் 'காப் ரெஸ்டோ' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தின் முன்பாக ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் ரவீந்திரன் ஹோட்டல் வாசலில் உள்ள மின் கம்பத்தின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ரவீந்திரனை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தது. காரின் வேகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவீந்திரன், நாற்காலியை விட்டு எழ முயன்றார். ஆனால், அதற்குள் கார் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த மின் கம்பத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. நூலிழையில் உயிர் தப்பிய செக்யூரிட்டி கார் மோதிய வேகத்தில் அந்த சிமெண்ட் மின் கம்பம் இரண்டாக உடைந்து நொறுங்கியது. மின் கம்பம் காரின் வேகத்தைத் தடுத்து நிறுத்தியதால், கார் ரவீந்திரன் மீது நேரடியாக மோதுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் விபத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில், அவர் நாற்காலியோடு பின்னோக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு லேசான சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் பெரும் உயிர்ச்சேதமின்றி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்களுக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/car-crashes-into-electric-pole-near-kozhikode-security-guard-has-narrow-escape




