சென்னை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாகும். கடந்த 3 ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், 2025-ம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், இந்த ஆண்டில் செப் டம்பர் 16-ந் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-cases-no-need-for-public-alarm-tamil-nadu-government




