டோக்கியோ, 45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரைஇறுதியில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷகிப்ஸாதா பர்ஹான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.மழையால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் வங்காளதேச அணி தடுமாறியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வங்காளதேச அணியில் தவ்ஹித் ஹரோடி மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேச அணி 13 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் சுயான் மோஹிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அப்துல் சமத் 30 ரன்கள், ஹசன் நவாஸ் 27 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 11.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-pakistan-advances-to-the-final-after-defeating-bangladesh




