முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் ஆடி மாதம் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில், 50வது ஆண்டு பூச்செரிதல் விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அம்மன் பூ பல்லக்கு ஊர்வலம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முளைப்பாரி ஊர்வலம் விழாவின் நிறைவு நாளான இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி, செல்வியம்மன் கோயிலில் இருந்து வடக்கூர் முருகன் கோயில், பேருந்து நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று சங்கரபாண்டி ஊரணியில் கரைத்தனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/mudukulathur-selliyamman-temple-aadi-mulaippari-urvalam




