மீனம்பாக்கம், கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது, தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. எந்திர கோளாறு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என 224 பேர் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்க முயன்றபோது, விமானத்தின் இடதுபக்க எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. மேலும். எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதே நிலையில் விமானத்தை சென்னையில் சாதாரணமாக தரை இறக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.அதுவரை விமானம், தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர், விமானம் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் இரவு 11.37 மணிக்கு பத்திரமாக சென்னையில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணி கள், ஊழியர்கள் என 224 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற பின்னர், விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் விமானம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விசாரணை இதையடுத்து, விமானத்தை 'ரிமோட் பே' எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு டெல்லி விமான போக்குவரத்து ஆணையக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-during-landing-plane-circles-over-chennai




