போபால், மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள அடோரி, போண்டாரி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் மர்ம நோய் பாதிப்பால் இதுவரை 7 குழந்கைகள் பலியாகினர். மர்ம நோய் பாதிப்பு மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள அடோரி, போண்டாரி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில், கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து மர்ம நோய் ஒன்று வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், உடலில் தடிப்புகள் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு ஏற்கனவே 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 7 குழந்தைகள் பலி இந்த நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தை நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தும் நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை அடுத்து. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/7-children-die-of-mysterious-illness-in-madhya-pradesh




