திருப்புவனம், அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் தப்பினர். அரசு தொடக்கப்பள்ளி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மஞ்சள் குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டி சுமார் 10 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படு கிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டிட முகப்பு பகுதி ஏற்கனவே சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பூச்சு பெயர்ந்து விழுந்தது இந்த நிலையில் நேற்று மதியம் கட்டிட முகப்பு மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் பால் பாண்டி பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு கருதி, முன்னதாகவே மாணவ-மாணவிகள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/plaster-from-government-school-roof-collapses-students-escape-unhurt




