ஜோஹன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தென் ஆப்பிரிக்காவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மைக்கு சட்டவிரோத அகதிகள் அதிகரிப்புதான் காரணம் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். சட்டவிரோத அகதிகள் இதனால், தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறிந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் முடிவில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த போராட்டத்தின்போது கடைகள் சூறையாடப்பட்டு அங்குள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே துப்பாக்கி சூடு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் வீடு வீடாக சென்று மக்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி யாரேனும் தங்கி இருந்தால் அவர்களை போலீசாரிடமும் ஒப்படைத்து வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் சிரில் ரம்பசா தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/south-african-protesters-intimidate-migrants-as-aid-group-issues-warning




