திருவனந்தபுரம், சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் மந்திரி முரளீதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மந்திரி முரளீதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அடிப்படை வசதிகள் அப்போது அவர் கூறியதாவது:- மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளன. எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட மேம்படுத்தி செயல்படுத்த அந்தந்த துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த தவறு, இந்த ஆண்டு நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும். ஏ.ஐ. தொழில் நுட்பம் சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அனைத்து பக்தர்களுக்கும் சபரிமலை தரிசனம் உறுதி செய்யப்படும். சீசனுக்கு முன்னதாக முதல்-மந்திரி தலைமையில் தென் மாநில மந்திரிகளின் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/a-new-initiative-to-manage-overcrowding-ai-technology-at-sabarimala




