புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். அதனால் புதுச்சேரிக்கு வரும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தவறாமல் அங்கு சென்று விநாயகரை தரிசித்துச் செல்வார்கள். புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் உடையில் நகரைச் சுற்றிப் பார்ப்பார்கள். அப்படியே அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். அதன்படி நேற்று பெங்களுருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்றனர். அவர்களில் இரண்டு பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்திருந்தனர். வேட்டி அணிந்த பெண்கள் அதனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், அவர்களுடன் வந்த பெரியவர்கள் மற்றும் ஒரு பெண்ணின் கணவரை மட்டும் அனுமதிப்போம் என்றனர் கோயில் ஊழியர்கள். ஆனால் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்கள் கோரிக்கை வைத்ததால், வேட்டி அணிந்துகொண்டு வந்தால் அனுமதிப்போம் என்றனர் கோயில் ஊழியர்கள். அதையடுயடுத்து அங்கிருந்த கடையில் வேட்டியை வாங்கி அந்தப் பெண்கள், ஷார்ட்ஸ் மீது அணிந்துகொண்டனர். அதையடுத்து கோயிலுக்குள் சென்று அவர்கள் தரிசனம் செய்தனர். மணக்குள விநாயகர் கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து அங்கு எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை. இதுவரை அங்கு அப்படி கடைப்பிடிக்கப்பட்டதும் இல்லை. அதனால் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/spiritual/in-puducherry-banned-on-wearing-shorts-women-offered-prayers-while-wearing-dhotis




