சென்னை, மக்களின் வரிப்பணத்தில் முதல் -அமைச்சர் விஜய் லண்டனுக்கு சொகுசுப் பயணம் என திமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடபாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மாநிலம் முழுதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம் அதற்கு எதிராக மக்கள் வீதியில் நின்று "தவெக ஆட்சி ஒழிக" எனத் தீப்பந்தம் ஏந்திப் போராடும்போது, தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத ‘டம்மி' முதல்-அமைச்சர் தம்பி விஜய், மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகுசுப் பயணம் சென்று, நண்பா நண்பிகளுடன் கார் ரேஸ் பார்த்து ஜாலியாகக் கையசைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது ஊரான்வீட்டு நெய்யில் தனியார் ரேசில் ஸ்வீட் செய்துகொண்டிருக்கிறார். மின்வெட்டு எல்லா மாநிலத்திலும் இயல்புதான்" என வெட்கமில்லாமல் பேசுகிறார் மின்சாரத் துறை அமைச்சர்! "மின்வெட்டே இல்லை, இதெல்லாம் 'Fake News'" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார் துணை சபாநாயகர்! பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள், ஊதியம் குறித்து செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அவர்கள் போராட்டத்திற்கும் என்னவென்று காது குடுத்து கேட்டகாத அகங்காரம் கொண்ட தவெக அரசு. பொறுப்பற்ற அரசு தனியாருக்கு உதவ அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்குக் கூட தட்டுப்பாட்டை உருவாக்கியது மட்டுமில்லாமல், பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும் ஆம்னி பேருந்து மாஃபியாக்களிடம் 'Party Fund' வாங்கிக்கொண்டு வாய மூடி வேடிக்கை பார்க்கிறது தவெக! இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-luxury-trip-to-london-on-peoples-tax-money-dmk-criticizes




