தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தில் நடுத்தெரு முத்துப்பாண்டி மகன் கருப்பசாமி (37 வயது). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தாய். இவர்களுக்கு கார்த்திகா, சுமித்ரா ஆகிய 2 மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லத்தாய் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து 3 குழந்தைகள் மற்றும் வயதான தாயார் தங்கமாரியம்மாளுடன் வசித்து வந்தார். மனைவி இறந்தது முதல் கருப்பசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று காலையில் வீட்டில் குழந்தைகளுடன் டீ குடித்துவிட்டு கருப்பசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார் வயல் வேலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். கதவு அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த குழந்தைகள், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது கருப்பசாமி தூக்கில் தொங்கியதை பார்த்து குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரது உடலை கீழே இறக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், தந்தையரை இழந்த நிலையில் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-hanging-himself-after-wifes-death




