சென்னை, சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற நேரலை தமிழக சட்டமன்றத்தில் தற்போது நேரலை ஒளிபரப்பின் மூலம் அவையில் நடைபெறும் விவாதங்கள், ஆளும் கட்சி–எதிர்க்கட்சி மோதல்கள், கேள்வி–பதில்கள் மற்றும் அமளி போன்றவை மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. சமீபத்திய அமர்வுகளிலும் காவல்துறை மானியக் கோரிக்கை உள்ளிட்ட விவாதங்களின்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் வெளிநடப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். சிபி சத்யராஜின் பதிவு இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ், சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும், நேரலை ஒளிபரப்பு குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாகரிகமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை எழுப்புவதற்குப் பதிலாக, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவையை ஒழுங்குடன் வழிநடத்தியதோடு, உறுதியுடனும் நியாயத்துடனும் சூழ்நிலையைக் கையாண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவர்களுக்குப் பாராட்டுகள்." என பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-working-hard-and-who-is-causing-hindrances-sibirajs-hard-hitting-post




