செங்கல்பட்டு, ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என்று சொல்லுங்கள். இனிவரும் ஒவ்வொரு திமுக கூட்டத்திலும் இதனைச் சொல்ல வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- குற்ற உணர்ச்சி இல்லாமல் கரூரில் கண்முன்னே 41 பேர் உயிரிழந்ததைப் பார்த்தும் எந்த குற்ற உணர்ச்சியும், மனசாட்சியும் இல்லாமல் ஓடிப்போனவர்தான் இந்த ஓடுகாலி முதல்-அமைச்சர் கரூர் துயரத்தின் போது ஆறுதல் சொல்லாமல் திருச்சியில் இருந்து சென்னைக்கு ஓடிப் போனவர்தான் விஜய் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். கரூர் துயரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய்க்கு குற்ற உணர்ச்சியோ, மனசாட்சியோ இல்லை. தவெக ஒரு கரகாட்ட கோஷ்டி தவெக ஒரு கரகாட்ட கோஷ்டி, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி நடக்கிறது. அதிமுகவை இரண்டாக உடைத்து அதில் ஒரு அணியை முதல்-அமைச்சர் விஜய் வாங்கிவிட்டார். மன்னிக்க கூடாது தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கின்றனர்; கேள்வி கேட்கிறார்கள். எந்த நேரம் வந்தாலும் நமக்கு துரோகம் பண்ணவர்களை மறக்கவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஓம் காளி, ஜெய் காளி. தவெக ஒரு ஓரு காலி கடந்த 2 ஆண்டுகளாக திமுக தீயசக்தி என்று கூறி வந்தார். அப்போதெல்லாம் நாம் (திமுக) ஆளுங்கட்சியாக இருந்தோம்; அவர் எதிர்க்கட்சியாக இருந்தார். இப்போது நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என்று சொல்லுங்கள். இனிவரும் ஒவ்வொரு திமுக கூட்டத்திலும் இதனைச் சொல்ல வேண்டும். இன்று இரு தொகுதிகளிலும் வந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்ததா? இந்த இடைத்தேர்தல் வந்ததற்கு யார் காரணம்? சட்டசபை தேர்தலில் தவெகவினருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இன்றைக்கு நடக்கக்கூடிய ஆட்சி, நாம் போட்ட பிச்சையில்தான் நடக்கிறது. ஏனெனில், நம்முடன் கூட்டணி வைத்து, நம் தலைவரின் பெயரைச் சொல்லி, வாக்கு சேகரித்து வெற்றி பெற்றவர்களின் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த ஆட்சியை திமுக போட்ட பிச்சை என்கிறோம். திமுகவினர் மக்களுக்குக் காசு கொடுப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு வைத்த முதல்-அமைச்சர், எம்எல்ஏ-க்களையே காசுகொடுத்து தூக்கிவிட்டார். அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/om-kali-jai-kali-thaveka-oru-oru-kali-udhayanidhi-attack




