சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. இதன்படி, கலந்தாய்வின் முதல் சுற்று நாளை பகல் 12 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆன்லைன் கலந்தாய்வு நிறைவடையும் எனவும், 20-ந்தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் 21-ந்தேதி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும், 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆணை பதிவிறக்கம் செய்யலாம். 23-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/education-and-employment/online-counseling-for-medical-student-admissions-starts-tomorrow



