திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் ரூ.234 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிப்பு 2031-ம் ஆண்டு 140 எம்.எல்.டி.-யை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில் 247.50 ஏக்கரில் தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்.எல்.டி. கொள்ளளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய தொழில்நுட்ப முறையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பம் இதற்கான கட்டுமான பணிகள் ரூ.233 கோடியே 87 லட்சத்தில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கசிவற்ற உள்கட்டமைப்பான சீக்வென்சிங் பயோரியாக்டர் (எஸ்.பி.ஆர்.) என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை மறுசுழற்சி செய் யும். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டங்களின் (யு.ஜி.டி. 1 மற்றும் 2) கீழ் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகளின் கழிவுநீர் தேவையை பூர்த்தி செய்யும். பழைய சுத்திகரிப்பு நிலையம் சுமார் 247.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. ஆனால் புதிய நவீன தொழில்நுட்ப வசதியால் 10 முதல் 20 ஏக் கர் பரப்பளவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலைய பயன்பாட்டுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் முடியும் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, கசிவு ஏற்படாமல் இருக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அடுத்த 3 மாதங்களில் அதாவது இந்தாண்டு இறுதிக்குள் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டு, அந்த இடம் மாநகராட்சியின் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-modern-sewage-treatment-plant-is-being-constructed-in-trichy-at-a-cost-of-234-crore




