கார்டூமின், சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மோதல் இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அதேவேளை, அந்நாட்டின் பல்வேறு கிளர்ச்சி குழுக்களும், ஆயுதக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, துணை ராணுவத்திற்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் இடையேயான மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். பொதுமக்கள் 21 பலி இந்நிலையில், சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் கவ்டா அருகே உள்ள டிபி, லுவிரி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/sudan-rebel-attack-kills-21



