சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே, முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற (அதாவது ஆகஸ்டு) 12-ந்தேதி அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனை நேரலை செய்வதாக அமெரிக்காவின் நாசா அறிவித்துள்ளது. இந்த நிகழ்வை பொதுமக்களும் கண்டு ரசிக்க, முழு சூரிய கிரகணத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களில் நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுகல், ஸ்பெ யின் மற்றும் ரஷியாவின் வடபகுதி மக்கள், சூரியன் முழுமையான நில வால் மறைக்கப்படும் நிகழ்வை காண முடியும். அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும். இந்த முழு நிகழ்வும் சுமார் 4 மணி 23 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்திய நேரப்படி வருகிற 12-ந்தேதி இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/total-solar-eclipse-occurs-on-the-12th-can-it-be-found-in-india




