கலிபோர்னியா, 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த ஜூலை 19-ந் தேதி நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்டம் முடிந்ததும் ஸ்பெயின் அணி வீரர்கள் மைதானத்தை வலம் வந்து தங்களது வெற்றியை ஆரவாரமாக கொண்டாடினார்கள். அப்போது தோல்வியின் விரக்தியில் இருந்த அர்ஜென்டினா அணி வீரர்கள் லியாண்ட்ரோ பாரேட்ஸ், தியாகோ அல்மாடா, மோலினா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்ட்டோ அயலா ஆகியோர் ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி, காவி, உள்ளிட்ட சில வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். பெரும் சர்ச்சையை ஏற்பத்திய இந்த விவகாரத்தால் கடும் அதிருப்தி அடைந்த சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) இந்த விதிமீறல் சம்பவம் குறித்து வக்கீல் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று உடனடியாக அறிவித்தது. இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையின் முடிவில் அர்ஜென்டினா கால் பந்து சங்கம் மற்றும் அந்த அணியின் வீரர்கள் மீது பிபா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையின் முடிவில் அர்ஜென்டினா கால் பந்து சங்கம் மற்றும் அந்த அணியின் வீரர்கள் மீது பிபா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஸ்பெயின் வீரர்களை தாக்கிய அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பாரேட்சுக்கு 10 போட்டியில் விளையாட தடை போடப்பட்டு இருப்பதுடன், ரூ.86 லட்சம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அணியின் வீரர்கள் மோலினாவுக்கு 7 போட்டியில் ஆட தடையும், ரூ.86 லட்சம் அபராதமும், தியாகோ அல்மாடாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை யும், ரூ.28 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினா அணியின் உதவி பயிற்சியாளர் ராபர்ட்டோ அயலாவுக்கு 3 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் ரூ.28 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தடை மற்றும் அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. முதலில் பிபாவிடம் முழுமையான தீர்ப்பு மற்றும் தண்டனைக்கான காரணங்களைப் பெறும் அர்ஜென்டினா, அதன் பின்னர் பிபா மேல்முறையீட்டு குழுவிடம் மனு தாக்கல் செய்ய உள்ளது. மேல்முறையீட்டுக்குப் பிறகும் தண்டனைகள் குறைக்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தை விளையாட்டு நடுவர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவும் அர்ஜென்டினா பரிசீலித்து வருகிறது. தடை குறைக்கப்படுவது தான் தற்போது அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் முக்கிய இலக்காக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/bans-and-fines-for-players-involved-in-the-clash-argentina-team-decides-to-appeal




