எஸ்பிஐ வங்கியில் 9,124 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1,410 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு: பணி விவரம்: ஜூனியர் அசோசியேட்ஸ் காலியிடங்கள்: மொத்தம் 9,124 பணியிடங்கள், தமிழ்நாட்டில் மட்டும் 1,410 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ, 01.04.2006 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது சம்பளம்: ரூ.24,050 முதல் ரூ.64,480 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறை; முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு & உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும். விண்ணப்ப கட்டணம்: ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 31.08.2026 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/education-and-employment/mega-recruitment-drive-at-sbi-9124-vacancies-who-can-apply




