திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 216 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 27 ஆயிரத்து 606 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 77 லட்சம் ஆகும். மேலும் 4 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 673 பக்தர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. தற்போது சிலாத்தோரணம் வெளியே வரை காத்திருப்பு வரிசை உள்ளது. எஸ்.எஸ்.டி.டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/devotees-wait-18-hours-for-free-darshan-in-tirupati-2




